இறந்த கணவரின் மறுபிறப்பு…. நாகப் பாம்புடன் வாழும் மூதாட்டி….!

0

இந்தியாவில் பெங்களூரு, கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் குல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மானஷா.

இவரது கணவர் சரவவ்வா மவுனேஷ் கம்பாரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மானஷாவின் வீட்டுக்குள் ஒரு நாகப் பாம்பு ஒன்று புகுந்துள்ளது.

மானஷா நாகபாம்பை வீட்டுக்கு வந்ததும் இறந்துபோன கணவர் மறுபிறவியாக நாகப் பாம்பாக வந்திருப்பதாக கருதி அதற்கு பால் ஊற்றி வளர்த்து வந்துள்ளார்.

4 நாட்களாக அந்த பாம்புடனே அவர் தங்கியும் இருந்துள்ளார்.

இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் பாம்பை பிடிக்க முயன்றனர்.

ஆனால் மானஷா தனது கணவரை வீட்டில் இருந்து வெளியேற்றக் கூடாது என்று அவர்களிடம் தகராறு செய்துள்ளார்.

மேலும் இது குறித்து வனத்துறைக்கும் பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here