இரு வெவ்வேறு வகையான கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண்…

0

பெல்ஜியத்தில் 90 வயது பெண் ஒருவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு வகையான கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது.

அப்பெண் தனியாக வசித்து வந்த நிலையில், வீட்டிலேயே நர்ஸிங் கவனிப்பைப் பெற்று வந்துள்ளார். அவர் கோவிட் தடுப்பூசி எதுவும் போடவில்லை.

இந்நிலையில், மார்ச் மாதம் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அலஸ்ட்டில் (Aalst) நகரத்தில் உள்ள ஓ.எல்.வி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

ஆரம்பத்தில் அவரது ஆக்ஸிஜன் அளவு நன்றாக இருந்தபோதிலும், அவரது நிலை விரைவாக மோசமடைந்தது. ஐந்து நாட்களுக்குப் பிறகு அவர் இறந்துள்ளார்.

அவர் எந்த வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பதை மருத்துவ ஊழியர்கள் பரிசோதித்தனர்.

அதன்போது ​​பிரித்தானியாவில் தோன்றிய Alpha மற்றும் தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட Beta ஆகிய இரண்டு வைரஸ்களும் அவரது உடம்பில் இருந்ததைக் கண்டறியப்பட்டது.

எனவே அந்த பெண்மணி இரண்டு வெவ்வேறு நபர்களிடமிருந்து வெவ்வேறு வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய OLV மருத்துவமனையைச் சேர்ந்த மூலக்கூறு உயிரியலாளர் அன்னே வான்கீர்பெர்கன் (Anne Vankeerberghen) தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஒரு நபருக்கு ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு வைரஸ் தொற்று ஏற்படுவது குறித்து ஆய்வுகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here