நாளை (20) நள்ளிரவு முதல் இரு வாரங்களுக்கு இலங்கை முடக்கப்படலாம் என அரச உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலைத்தடுத்து, சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கிலேயே பொது முடக்கத்துக்கு செல்வது தொடர்பில் பரீசிலிக்கப்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.
பொது முடக்கம் தொடர்பில் அரச தரப்பிலிருந்து இன்னும் உத்தியோகப்பூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை. எனினும், முடக்கத்துக்கான சாத்தியம் அதிகம் இருப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே அரச பங்காளிக்கட்சிகள்கூட இன்று அவசர கோரிக்கையொன்றை விடுத்ததாகவும் அறியமுடிகின்றது.
அதேவேளை, நாடு முடக்கப்படும் என்பதால் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு பொறுப்பற்ற விதத்தில் செயற்பட வேண்டாம் என சமூக ஆர்வளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். தேவையானளவு பொருட்களை மட்டும் அருகில் உள்ள கடைகளில் கொள்வனவு செய்துகொள்ளுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி வீட்டிலிருந்து ஒருவர் சென்றாலே போதுமானதாக இருக்கும்.