இரு முகக்கவசங்கள் சிறந்தது…. நிபுணர்கள் வலியுறுத்தல்..!

0
1303835701 Kemal Yildirim/Getty Images

கொரோனா தொற்றுக்கு எதிராக சுகாதார வல்லுநர்கள் இரண்டு முகக்கவசங்களை (Double Mask) பயன்படுத்த ஊக்குவிக்கின்றனர்.

துணியால் ஆன ஒரு முகக்கவசம் மற்றும் அறுவைசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் முகக்கவசம் ஆகிய இரண்டையும் இணைத்து பயன்படுத்துவது மூலம், மூக்கு மற்றும் வாய் பகுதிகளை முற்றிலுமாக மறைத்து, காற்று கசிவதைத் தடுக்கலாம் என்று அமெரிக்காவின் Centers for Disease Control and Prevention (CDC) ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

ஒரு முகக்கவாசத்தை விட, இரட்டை முககைவசம் அதிகபட்சம் 95 சதவீதம் வரை பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு அறுவை சிகிச்சை முகக்கவாசத்தின் மேல் ஒரு துணி முகக்கவாசத்தை இணைத்தால் மட்டுமே சரியாக உதவும், இது உங்களை கொடிய வைரஸிலிருந்து விலக்கி வைக்கும் மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தை குறைக்காது.

  1. முடிச்சு போடப்படாத மாஸ்க்: (Unknotted Mask)

முடிச்சு போடப்படாத அறுவை சிகிச்சை மாஸ்க் அணிந்து, அதற்கு மேல் துணி மாஸ்க் அணியலாம்.

ஆனால் அது 56.6 சதவீதம் வரை மட்டுமே பாதுகாப்பை வழங்கும் என தெரியவந்துள்ளது.

  1. முடிச்சு போட்ட மாஸ்க்: (knotted Mask)

முதலில் முடிச்சு போட்ட அறுவை சிகிச்சை மாஸ்க் அணிந்து, அதற்கு மேல் துணி மாஸ்க் அணியலாம்.

இதன் மூலம் 85.4 சதவீத பாதுகாப்பை பெற முடியும்.

N95 முகக்கவசத்தை பயன்படுத்துபவர்கள், இந்த இரட்டை கவசத்தை அணியவேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் N95 முகக்கவசம் 95 சதவீதம் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

இது மிகவும் தரமான ஒன்று (gold standard one) என்றும் இது நமது முகத்தை சிறப்பாக மறைக்க உதவும் என கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here