இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

0

தென் ஆப்பிரிக்காவில் உள்ள Keperha எனும் நகரிலிருக்கும் நெடுஞ்சாலை வழியாக 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி பேருந்து ஒன்று சென்றுள்ளது.

இந்நிலையில் இந்த மினி பேருந்து எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதனையடுத்து வேகமாக சென்று கொண்டிருந்த அந்த பேருந்து கண் இமைக்கும் நேரத்தில் எதிரே வந்த மற்றொரு பஸ்சின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

உயிரிழந்தவர்களில் ஒரு வயது முதல் நான்கு வயது வரை உள்ள இரண்டு குழந்தைகளும் அடங்குவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பலர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here