இரு பெண்களை கடித்துக் குதறிய நாய்! உரிமையாளருக்கு நேர்ந்த கதி…

0
Norman, a 55th Security Forces Squadron military working dog, waits to be unleashed and go after his target during training April 17. The Offutt K-9 unit performs regular training to maximize the dogs effectiveness in the field. (U.S. Air Force Photo by Josh Plueger)

பிரான்ஸில் avenue Maurice-Thorez வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த இளம் பெண் ஒருவரை வளர்ப்பு நாய் ஒன்று கடித்துள்ளது.

Champigny-sur-Marne (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியின் நடைமேடைப்பகுதியில் குறித்த பெண் விழுந்து கிடக்க அவரை molosse வகை வளர்ப்பு நாய் பல தடவைகள் கடித்து குதறியுள்ளது.

இதனையடுத்து அப்பெண்ணை தீயணைப்பு படையினரும், காவல்துறையினரும் ஒரு வழியாக மீட்டு அவருக்கு சிகிச்சை அளிக்க முற்பட்டுள்ளனர்.

பின்பு குறித்த நாய் அப்போது மற்றொரு பெண்ணை கடித்துள்ளது.

இப்போது துரிதமாக செயற்பட்ட காவல்துறையினர் இரண்டாவது பெண்ணை காப்பாற்றும் நோக்கோடு குறித்த நாயை சுட்டுக்கொன்றுள்ளார்.

மேலும் வளர்ப்பு நாயின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.

பொது இடங்களுக்கு வளர்ப்பு நாயை அழைத்துச் செல்லும் போது அதற்கு வாய்க்கவசம் அணிவிக்கவேண்டும் எனும் சட்டத்தை மீறியுள்ளார்.

மேலும் சம்பவத்தில் காயமடைந்த இரு பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here