இரு கொரோனா நோயாளிகள் வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்

0

இலங்கையில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்நிலையில் களுத்துறை – நாகொட வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை மையத்திலிருந்து இரண்டு பேர் தப்பிச் சென்றுள்ளனர்.

வைத்தியசாலையின் மதில் மீதேறி அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

அதில் பெண் ஒருவரும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுறுதியாகி வீடுகளில் இருந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய முதற்கட்ட செயற்பாடுகள் தொடர்பிலான ஆலோசனைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

விசேட குழுவொன்றினால் இந்த ஆலோசனை அடங்கிய அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here