இரு குழந்தைகளை ஜன்னல் வழியாக வீசி எறிந்த இளம் தாய்!

0

அமெரிக்காவின் நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் சனிக்கிழமை பிஞ்சு பிள்ளைகள் இருவரை குடியிருப்பின் இரண்டாவது மாடியில் இருந்து வெளியே வீசி, தாயார் ஒருவர் குதித்த சம்பவத்தில் பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

24 வயதான Dejhanay Jarrell என்ற இளம் தாயார் குடியிருப்பின் இரண்டாவது மாடியில் ஜன்னல் வழியாக தமது இரு பிள்ளைகளையும் வீசியுள்ளார்.

உடை ஏதும் இல்லாமல் பிள்ளைகள் தரையில் விழுந்த சில நொடிகளில், அவரும் நிர்வாணமாக வெளியே குதித்துள்ளார்.

பின்னர் தமது பிஞ்சு குழந்தையின் தலையை தரையில் மோதியபடி அலறியுள்ளார்.

இதனிடையே குழந்தைகளில் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த 41 வயதான Carl Chin என்பவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

அந்த இளம் தாயாரிடம் இருந்து பிள்ளைகளை காப்பாற்ற முயன்றுள்ளார்.

இந்நிலையில் நியூயார்க் நகர பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த ஒரு குழந்தையை உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் தாயாரையும் இன்னொரு குழந்தையையும் காயங்களுடன் மீட்டு Brookdale மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் Dejhanay Jarrell மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் பொலிசார் வழக்குப் பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here