இரு குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை -தந்தை கைது

0

இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து பின்னர் தானும் விழுந்து தற்கொலைக்கு முயன்ற தந்தையை பொலிஸார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்., ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், 35, பொக்லைன் டிரைவர். இவர் மனைவி பழனியம்மாள், 32. இவர்களுக்கு ருதிஸ்னாஸ்ரீ, 4, மற்றும் இரண்டரை வயதில் கிருஷ்ணா என்ற குழந்தைகள் இருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு தம்பதியர் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த முருகேசன் தன் இரு குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு, கழுகூர் பஞ்., புதூர் கிராமத்தில், மணி என்பவருக்கு சொந்தமான, 100 அடி ஆழமுள்ள கிணற்றில் மகள், மகனை தூக்கி வீசியதில் குழந்தைகள் உயிரிழந்தன. பின்னர் முருகேசனும் கிணற்றில் விழுந்ததில் கைமுறிவு ஏற்பட்டது.

நேற்று காலை, 6:30 மணியளவில் கிணற்றின் உரிமையாளர் மணி, நிலத்தில் தண்ணீர் பாயச்சுவதற்காக மின் மோட்டாரை போடும்போது கூச்சலிடும் சத்தம் கேட்டது. அப்போது இரு குழந்தைகள் இறந்து மிதந்தன. கிணற்றில் முருகேசன் அழுது கொண்டு இருந்தார்.

பின்னர், முசிறி தீயணைப்பு வீரர்கள் கைமுறிவு ஏற்பட்ட முருகேசன், இறந்த குழந்தைகளை மீட்டனர். இது குறித்து, தோகைமலை குளித்தலை: இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து பின்னர் தானும் விழுந்து தற்கொலைக்கு முயன்ற தந்தையை பொலிஸார் கைது செய்தனர். வழக்குப்பதிந்து, முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here