இருளில் மூழ்கும் இலங்கை…! முக்கிய அறிவிப்பு…

0

இலங்கையில் மின்சார மீள் இணைப்பு பணிகளில் ஈடுபட போவதில்லை என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று 1 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு இதனை தெரிவித்துள்ளார்.

சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதால், 8 மணிநேரத்திற்கு மேலதிகமாக பணிப்புரிய போவதில்லை என அவர் கூறியுள்ளார்.

தங்களுக்கான கடமை நேரம் 8 மணிநேரத்திற்குள் உள்ளடங்காத காரணத்தினால் இவ்வாறு மின்சார மீள் இணைப்பு பணிகளில் ஈடுபடப்போவதில்லை எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here