இருளில் மூழ்குமா இலங்கை?

0

மின்சார துண்டிப்பு பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தேவையான டீசல் பற்றாக்குறை காரணமாக அந்த மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு பிரிவின் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன. இதன் காரணமாக மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நேற்றிரவு மின்சார துண்டிப்பு ஏற்பட்டதாகத் கூறப்படுகின்றது.

குறித்த மின்னுற்பத்தி நிலையத்தின் பாதிப்பு காரணமாகத் தேசிய மின் கட்டமைப்பில் 165 மெகாவோட் மின்சாரத்திற்கான பற்றாக்குறை நிலவுகின்றது.

அதேசமயம் எரிபொருள் இன்மையால் சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நேற்று மதியம் தடைப்பட்டன. எவ்வாறாயினும் 900 மெற்றிக் டன் உலை எண்ணெய் கிடைக்கப்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இன்று இரவு 10 மணிக்குள் சப்புகஸ்கந்த டீசல் மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தேவையான டீசல் கிடைக்கப்பறாவிட்டால் நிலையத்தின் செயற்பாடுகள் பாதிப்படையக்கூடும் என மின்சார பொறியியலாளர் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, சப்புகஸ்கந்த டீசல் மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் பாதிப்படையுமாயின் தேசிய மின் கட்டமைப்பில் மேலும் 150 மொகாவோட் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வாறு ஏற்படுமாயின் சுமார் ஒன்றரை மணிநேரத்திற்கும் அதிக காலம் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here