இந்திய மின்சார சபை ஊழியர்களின் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்இ
சுமார் 36 மணித்தியாலங்களாக இந்தியாவின் சண்டிகர் நகரில், மின் மற்றும் குடிநீர் விநியோகம் முற்றிலும் ஸ்தம்பித்து காணப்பட்டுள்ளது.
மின்சார சபையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து , சண்டிகர் நகரில் மின்சார ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் சண்டிகரில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் கடந்த 2 நாட்களாக பல பகுதிகள் இருளில் முழ்கியுள்ளதுடன், குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
மின் தடை காரணமாக சாலைகளில் போக்குவரத்து சமிக்ஞைகளும் இயங்காததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வைத்தியசாலைகளில் முக்கிய சத்திர சிகிச்சைகளை தவிர்த்து ஏனைய சத்திர சிகிச்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.
மின் பிறப்பாக்கிகள் மூலம் 100 சதவீத மின்சாரத்தை வழங்க முடியவில்லை.
பஞ்சாப் மற்றும் ஹரியானா இரு உயர்நீதிமன்றங்களும் தாமாக முன் வந்து இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மின்சார சபையின் தலைமை பொறியியலாளரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதியரசர்கள் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.