இராணுவ தளபதி விடுத்த விசேட அறிவிப்பு!

0

கொவிட் மரணங்களின் எண்ணிக்கையைத் தம்மால் உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது என கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தொற்றாளர்களின் எண்ணிக்கையை மறைக்கும் நோக்கும் தமக்குக் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைக் கோவிட் தொற்று தாக்கினால் அவர்கள் தொற்றிலிருந்து தப்புவது கடினம்.

நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுமே கோவிட் தொற்றினால் அதிகம் உயிரிழக்கின்றனர்.

என்ற போதும், சகல தரப்பினரும் தடுப்பூசிகளைப் பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here