இராணுவத் தளபதி விடுக்கும் விசேட அறிவிப்பு!

0

நிறுவனங்களின் கடமைகளுக்குத் தேவையானவர்களை மட்டுமே அழைக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களிடம் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊழியர்களை விருப்பப்படி நிறுவனங்களுக்கு அழைத்தால், கொரோனா அபாயம் அதிகரிக்கலாம் என்றும், இந்த நேரத்தில் தேவையான ஊழியர்களை மட்டுமே அழைப்பது நிறுவனங்களின் தலைவர்களின் பொறுப்பு என்றும் கூறினார்.

சில நிறுவனங்கள் அதிக ஊழியர்களை அழைப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த நேரத்தில் நாங்கள் நாட்டை மூடுவது பற்றி பேசக்கூடாது, ஆனால் நாடு மூடப்படாத பட்சத்தில் வேலை செய்வது அனைத்து குடிமக்களின் பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.

நாட்டை மூட வேண்டாம் என்று பெரும்பாலான மக்கள் கேட்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் குறிப்பாக பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட பொது இடங்களில் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here