சுன்னாகத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன், தவறி விழுந்ததாக சுன்னாக பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு, மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினரால் தாக்கப்பட்டதாக கூறி, உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் (வயது-22) என்ற இளைஞன், சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்குடன் சுன்னாக பொலிஸார் வைத்தியசாலைக்கு சென்று, இளைஞரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலம் பெற்றனர்.
இதன்போது, குறித்த இளைஞன், தான் தவறி விழுந்தே காயங்களுக்கு உள்ளானேன் என வாக்கு மூலம் அளித்ததுடன், தனக்கு வேறு எதுவும் ஞாபகம் இல்லை எனவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.