இரத்தினபுரியில் 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு!

0

இரத்தினபுரி – தும்பர -இஹலபொல பகுதியில் மண் சரிவில் சிக்கி காணாமல் போன மூவரில் 16 வயதான சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த மண் சரிவில் சிக்குண்டு காயமடைந்த அச்சிறுமியின் தாய் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மற்றைய நபர் மாயமாகியுள்ளமை குறித்து மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here