இரத்தம் உறைதல் தொடர்பில் அஸ்ட்ராசெனகா நிறுவனம் வெளியிட்ட தகவல்

0

ஒஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட டென்மார்க்கைச் சேர்ந்த ஒருவர் வெய்ன் த்ராம்போசிஸ் எனப்படும் நரம்பில் இரத்தம் உறைந்து உயிரிழந்தார்.

அதைத்தொடர்ந்து, நோர்வே, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, ஜேர்மன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அஸ்ட்ராசெனகா ஊசி போடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தன.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக அஸ்ட்ராசெனகா நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், தெளிவான அரசியல் சான்றுகளின் அடிப்படையில் தங்களது மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்களது தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 17 மில்லியன் மக்களின் தரவுகளை கவனமாக பரிசீலித்து வருவதாகவும் அவர்களின் வயது, பாலினம் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதையும் ஆராய்ந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 15 பேருக்கு நரம்பில் இரத்தம் உறைதல் காணப்பட்டதாகவும் 22 பேருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது

மேலும் ஏனைய தடுப்பூசிகளிலும் இதுபோன்ற சிக்கல் காணப்படுவதாகவும் அஸ்ட்ராசெனகா கூறியுள்ளது.

இந்த நிலையில் அஸ்ட்ராசெனகாவின் தடுப்பூசி பாதுகாப்பானது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here