பிரான்ஸ் ஜனாதிபதியாக 2 வது முறையாக இம்மானுவேல் மாக்ரோன். பதவியேற்றார்
பிரான்ஸ் அதிபர் மாளிகை அலுவலகமான எலிசி அரண்மனையில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட 500 பேர் கலந்துக்கொண்டனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் 2வது சுற்றில் 58.5% வாக்குகளை பெற்று மாக்ரோன் வெற்றிப்பெற்றார்.
பதவியேற்ற பின் பேசிய மாக்ரோன், பிரான்ஸிற்கும் உலகத்திற்கும் இதுவரை இல்லாத சவால்கள் உள்ள நேரத்தில், புதிய திட்டங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
அவரது 2 வது பதவிக்காலம் புதிததாக இருக்கும் என்றும் முதல்முறையின் தொடர்ச்சியாக மட்டும் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் கவலைகள் ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.
44 வயதான மக்ரோன், 1958 இல் ஐந்தாவது குடியரசு உருவானதிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கூட்டணி அரசாங்கத்தில் சேராத முதல் ஜனாதிபதி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.