இரண்டாவது டெஸ்டிலிருந்து விலகிய கேப்டன் கோலி…!

0

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

Centurion மைதானத்தில் நடந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றிப்பெற்றது.

இந்நிலையில், இன்று ஜனவரி 3ம் திகதி ஜோகன்ஸ்பெர்க் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.

2வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய கேப்டன் கோலி விலகியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோலிக்கு பதிலாக 2வது டெஸ்டில் இந்திய அணி கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

காயம் காரணமாக கோலி விலகியதாக கூறிய ராகுல், அவருக்கு மேல் முதுகில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கோலிக்கு பதிலாக ஹனுமா விஹாரி இந்திய அணி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

2வது டெஸ்டில் விளையாடும் இந்திய வீரர்கள் 11 பேரின் விபரம்:

மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் (கேப்டன்), புஜாரா, ஹனுமா விஹாரி, ரஹானே, ரிஷப் பண்ட், அஸ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here