இரணை தீவு தோண்டப்பட்ட குழிகளால் பெரும் அதிர்ப்தியில் மக்கள்…!

0

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலம் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தற்போது புதைப்பதற்கான திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மக்களின் கடும் எதிர்ப்பை மீறியும் இரணை தீவு பகுதியில் கொரோனாவினால் இறந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 360 க்கும் மேற்பட்ட குடும்பங்களை கொண்ட இரணைதீவு பகுதியில் மக்களின் அனுமதியோ அல்லது பொது அமைப்புக்களின் ஆலோசனைகளோ இன்றி கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய கல்லறைகள் அமைக்கப்பட்டு கொடிகள் நாட்டப்பட்டுள்ளது.

எனவே அரசாங்கம் இம் முடிவை மீள் பரிசீலனை செய்து மக்கள் நடமாட்டம் அற்ற தீவுகளை தெரிவு செய்து அவ்வாறன பகுதிகளில் சடலங்களை அடக்கம் செய்ய முனைய வேண்டும்.

பல போரட்டங்கள் மத்தியில் மீள் குடியேறி வாழ்வாதாரத்தை கொண்டு செல்லும் இரணை தீவு மக்கள் வசிக்கும் பகுதிகளில் இவ்வாறன செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை வெளிப்படுத்துவதற்கு புதன் கிழமை காலை 9 மணியளவில் இரணை தீவில் வசிக்கும் மக்கள் அனைவரும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் என இரணை தீவு பங்குதந்தை அருட்தந்தை மடுத்தீன் பத்திநாதர் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் கக்கட தீவு பகுதியிலும் குழிகள் தோண்டப்பட்ட நிலையில் நீர் வெளி வந்த காரணத்தினால் அப்பகுதியில் குழிகள் தோண்டும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here