இரட்டைக் குழந்தைகளை கொடூரமாக குத்தி கொலை செய்த பெண்…

0

நியூயார்க்கில் Dakota Bentley மற்றும் Dallis Bentley என்னும் இரட்டைக் குழந்தைகளின் தாயான ஒரு இளம்பெண்ணிடம், அவர்களது உறவினர் ஒருவர், குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என விசாரித்துள்ளார்.

அப்போது அந்த பெண் முன்னுக்குப் பின் முரணாக ஏதோ கூறியதால் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து பொலிசார் அந்த வீட்டுக்குச் செல்ல, அந்த வீட்டிலிருந்த 23 வயது பெண், பொலிசாரைக் கண்டதும் பதற்றமடைந்திருக்கிறார்.

குழந்தைகள் எங்கே என்று பொலிசார் கேட்க, எனக்கு அவர்கள் வேண்டாம் என திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார்.

குழந்தைகளை பொலிசார் தேட, தொட்டிலுக்குள் தலையில் கத்திக்குத்துக் காயத்துடன் இறந்து கிடந்திருக்கிறான் Dakota Bentley.

மற்ற மகன் எங்கே என்று கேட்க, பாத்திரம் கழுவும் சிங்குக்கு கீழே கையைக் காட்டியிருக்கிறார் அந்த பெண். அங்கே ஒரு போர்வையில் சுற்றப்பட்டு, குத்தப்பட்ட கத்தியுடன் கிடந்திருக்கிறாள் பெண் குழந்தையான Dallis Bentley.

அந்த பெண் ஏன் குழந்தைகளைக் கொலை செய்தார், குழந்தைகளின் தந்தை யார் என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.

அந்த பெண் மீது இன்னமும் எந்த குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை. பொலிசார் அவரை விசாரித்து வருகிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here