இரட்டைக் குழந்தைகளை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த தாய்….

0

அமெரிக்காவில் மின்னல் வேகத்தில் கார் ஒன்று தங்களை நோக்கி வருவதைக் கண்ட ஒரு பெண், விபத்திலிருந்து தன் குழந்தைகளை காப்பாற்ற தன் உயிரையே தியாகம் செய்துள்ளார்.

அமெரிக்காவின் மிச்சிகனில், 25 வயதுள்ள ஒருவர் மிக வேகமாக காரை செலுத்திக்கொண்டு வந்துள்ளார்.

அப்போது, Hillarie Galazka (29) என்ற பெண் தன் இரட்டைக் குழந்தைகளுடன் தனது காரில் அமர்ந்திருந்திருக்கிறார்.

கார் ஒன்று தாங்கள் அமர்ந்திருக்கும் காரை நோக்கி வேகமாக வருவதைக் கண்ட Hillarie, சட்டென தன் இரண்டு குழந்தைகளையும் தன் உடலால் மூடி மறைத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த கார் மோதிய வேகத்தில், Hillarie பலியாக, குழந்தைகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பி விட்டார்கள்.

ஆனால், இரண்டு பேருக்கும் ஐந்து வயது என்பதால், நடந்ததை நன்றாக நினைவில் வைத்துள்ளார்கள் அந்த சிறுவர்கள்.

இதற்கிடையில், Hillarie இருந்த கார் மீது மோதிய நபர் அங்கிருந்து தப்பிவிட்டாலும், ஒரு மருத்துவமனைக்கு சென்றபோது பிடிபட்டுவிட்டார்.

கார் ஓட்ட தடை, பிடி வாரண்ட்கள் மற்றும் ஏற்கனவே பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவரான அந்த நபரை பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here