இயல்பு நிலைக்கு திரும்பும் உக்ரைன்….. ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் முக்கிய அறிவிப்பு

0

உக்ரைனில் சில பகுதிகளில் இயல்பு வாழக்கை திரும்புவதாக ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

தனது தினசரி உரையில் பேசிய ஜெலன்ஸ்கி, ஆக்கிரமிப்பாளர்கள் (ரஷ்ய வீரர்கள்) தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வரும் மாவட்டங்கள் மற்றும் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை சரிசெய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

குறிப்பாக, Chernihiv மற்றும் Nizhyn இடையேயான ரயில் போக்வரத்து நாளை முதல் மீண்டும் தொடங்கும் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், போர் எதிர்ப்பு கூட்டணியிடமிருந்து மேலதிக ராணுவ ஆதரவு கோரி ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, ரஷ்யாவுக்கு எதிராக இன்னும் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

இந்த இரண்டு வழியில் ஆதரவு அளித்தால் உக்ரைனில் போர் விரைவில் முடிவுக்கு வரும்.

நாங்கள் கோரியுள்ள அனைத்து ஆயுதங்களும் எவ்வளவு கூடுதலாக விரைவாக கிடைக்கிறதோ, அவ்வளவு விரைவாக அமைதி திரும்பும் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here