இயல்பு நிலைக்கு திரும்பும் சுவிட்சர்லாந்து!

0

சுவிட்சர்லாந்து இம்மாத இறுதியில் இயல்புநிலைக்கு திரும்பும் என Bernஇல் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்படுவது குறித்த சில தகவல்களை அரசு வெளியிட்டுள்ளது.

சில குறித்த கட்டுப்பாடுகளுடன் மதுபான விடுதிகளும் உணவகங்களும் வாடிக்கையாளர்களை கட்டிடங்களுக்குள் அனுமதிக்க, அனுமதியளிக்கப்பட உள்ளது.

வீடுகளிலிருந்த வண்ணம் வேலை செய்வது கட்டாயம் என்ற நிலை மாறி, விரும்பினால் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்ற நிலை உருவாக உள்ளது.

மூலிகைக் குளியல் மையங்கள் முதலான அமைப்புகளுக்கு அனுமதியளிக்கப்பட உள்ளது.

உயர் கல்வி அமைப்புகள் இனி நேரடியாக வகுப்புகளிலேயே மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கலாம்.

குழுவாக விளையாடும்போது இனி 15 பேருக்கு பதில் 30 பேர் வரை இணைந்து விளையாட அனுமதி அளிக்கப்படவுள்ளது.

ஆனால், இரவு விடுதிகளுக்கு அனுமதி இல்லை.

அதாவது, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இனி தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.

இந்த விதிகள் அனைத்தும், மே மாதம் 31ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here