இயந்திர மனிதர்களாக மாறும் ரஷ்ய வீரர்கள்….. அதிர்ச்சியில் உலக நாடுகள்…

0

உக்ரைனில் ரஷ்யா தனது போர் தாக்குதலை மிகவும் தீவிரமாக நடத்துகின்றது.

இதனிடையே ரஷ்ய வீரர்களுக்கு மிகவும் கொடூரமான “எக்ஸோஸ்கெலட்டன்”(exoskeleton) உடைகளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை நடைபெற்று வரும் உக்ரைன் போரில் இந்த உடைகள் பயன்படுத்தப்பட்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.

இந்நிலையில், இந்த கவச உடையானது எதிராளிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுக்கவல்லது என தெரிவந்துள்ளது.

இந்த “எக்ஸோஸ்கெலட்டன்”(exoskeleton) உடைகள் ராணுவ வீரர்கள் அதிக எடையுள்ள சுமைகளை சுமந்து செல்ல உதவும்.

மிக நீண்ட தூரங்களுக்கு ரஷ்ய வீரர்கள் பயன்படுத்தும் இயந்திர துப்பாக்கிகளுக்கு ஆபத்தான துல்லியத்தை வழங்கவல்லது எனவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய இராணுவ பாதுகாப்பு ஒப்பந்தத்தாரர் TsNiiTochMash ஐச் சேர்ந்த Oleg Faustov என்பவர் தெரிவிக்கையில்,

இந்த உடைகள் சாதாரண மனிதப் படை வீரர்களை மிகவும் ஆபத்தானதாக மாற்றி படைவீரர்களின் உடல் திறனை பல மடங்கு மேம்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.“

மேலும் இந்த எக்ஸோஸ்கெலட்டன் உடைகள் ராணுவ வீரர்களை கணினியின் துல்லியத்துடன் கூடிய இயந்திர மனிதர்களாக மற்றும் என தெரிவித்துள்ளார்.

இத்தகையக நவீன ஆயுதங்கள் ஏற்கனவே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் முன்பு சோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here