இயக்குனர் யார் என்றே தெரியவில்லை… தொடங்கிய அந்தகன் படப்பிடிப்பு!

0

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் . அந்தகன் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த படத்தை அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே ஜே பிரட்ரிக் இயக்க ஒப்பந்தமானார். இந்த படத்தின் ப்ரோமோவை கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட்டது படக்குழு.

ஆனால் இன்னமும் படப்பிடிப்பு தொடங்கவில்லையாம். இந்நிலையில் அந்த படத்தின் இயக்குனர் ஜே ஜே பிரட்ரிக் விலகியுள்ளதாக ஒரு செய்தி பரவ ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் தயாரிப்பாளர் தியாகராஜன் இயக்கத்தில் அதிகமாக குறுக்கீடு இருப்பதே காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த செய்தி வதந்தி என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அதில் பிரசாந்த், சிம்ரன் மற்றும் தயாரிப்பாளர் தியாகராஜன் ஆகியவர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இயக்குனர் பிரட்ரிக் கலந்துகொள்ளவில்லை. இதனால் படத்தை இயக்கப் போவது யார் என்றே தெரியவில்லை. ஒரு வேளை தியாகராஜனே படத்தை இயக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. தியாகராஜன் ஏற்கனவே பிரசாந்தை வைத்து பொன்னர் சங்கர் மற்றும் மம்பட்டியான் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here