இயக்குனர் பாலா மீது கோபத்தில் சூர்யா…?

0

சூர்யா-பாலா படத்தில் கிருத்தி ஷெட்டி மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முன்னணி ஹீரோயின்களாக உள்ளனர்.

இப்படத்தில் சூர்யா காது கேளாத வாய் பேச முடியாத கேரக்டரில் நடிக்கிறார் என்றும், மொத்த படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக முடித்துவிடுவார் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது இந்த படத்தின் சர்ச்சையான தகவல்கள் சில வெளிவந்து வருகின்றன.

சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே பிரச்சனை எனவும் சூர்யா படப்பிடிப்பு தளத்திலிருந்து கோபத்துடன் வெளியேறிவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் சிலர் தெரிவித்துவந்தனர்.

இப்படம் கைவிடப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டுவந்தது. பொதுவாக பாலாவின் படங்களில் பிரச்சனைகள் எழுவது வழக்கம் எனும் காரணத்தால் இதுவும் ஒரு வகையில் உண்மைதானோ என பலர் கருதிவந்தனர்.

ஆனால் இது உண்மையல்ல எனத் தெரிவிக்கும் விதமாக அமைந்துள்ளது இப்படத்தைத் தயாரித்துவரும் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவன இணை தயாரிப்பாளர் ராஜசேகரின் ட்விட்டர் தெரிவித்திருப்பதாவது, அவர், பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இப்படம் முழுமூச்சுடன் சிறப்பாகச் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்டப் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜசேகரின் இப்பதிவு, இப்படம் தொடர்பாக சமூக வலைதளங்களில் உலாவந்த ஆதாரமற்ற தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here