இயக்குனர் சுந்தர்.சி மருத்துவமனையில் அனுமதி

0

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் இதனால்0 பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில், தற்போது, நடிகை குஷ்புவின் கணவரும், இயக்குனருமான சுந்தர்.சி-யும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து குஷ்பு டுவிட்டரில் கூறியதாவது: “எனது கணவர் சுந்தர்.சி-க்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. அவர் நலமாக உள்ளார். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்” என குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகை குஷ்பு, பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். நடிகை குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்து அவரது கணவர் சுந்தர் சி-யும் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஷ்புவின் டுவிட்டர் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here