இன்றைய வானிலை அறிவிப்பு!

0

இலங்கையில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி நுவரெலியா காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புத்தளத்திலிருந்து கொழும்பு வழியாக காலி வரையிலான கடற்பகுதியில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

மேலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகமானது மணித்தியாலயத்திற்கு 20 – 35 கிலோமீற்றர் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here