இன்றைய ராசிபலன் – 29.03.3022

0

மேஷம்

மேஷம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள்.

உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.

வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும்.

உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும் . உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு‌.

விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்புகள் நிகழும்.

வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சாதித்துக் காட்டும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமாக செயல்படுவீர்கள்.

குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள். நீங்கும் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

கடகம்

கடகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய பிரச்னைகள் தலைதூக்கும்.

குடும்பத்தில் இருந்த எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி இருக்கும்.

யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் புது முடிவினை தவிர்க்கவும்.

உத்தியோகத்தில் அதிகாரிகள் பனிப்போர் வந்து நீங்கும். போராட்டமான நாள்.

சிம்மம்

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.

கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.மனைவி வழியில் நல்ல செய்து உண்டு.

வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் அமைதி நிலவும். திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி

கன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

அரசால் அனுகூலம் உண்டு. விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும்.

வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள்.

உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பர்.

திடீர் யோகம் கிட்டும் நாள்.

துலாம்

துலாம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.

புதியவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு.

வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.

உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.

தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.மகளுக்கு நல்ல வரன் அமையும்.

வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும்.

அரசால் ஆதாயம் உண்டு.வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.

உத்தியோகத்தில் அதிகாரிகள் நினைத்ததை முடிப்பீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மகரம்

மகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன் – மனைவிக்குள் பிணக்குகள் நீங்கும்.

தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்லசெய்தி வரும்.

வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு.உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்.

கொஞ்சம் பொறுமையாக இருங்கள். வியாபாரத்தில் கடன் தர வேண்டாம் .

உத்தியோகத்தில் தானுண்டுதன் வேலையுண்டு என்றிருக்க பாருங்கள். சிக்கனம் தேவைப்படும் நாள்.

மீனம்

மீனம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிவரும்.

சகோதரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும்.

உடல் நலத்தில் கவனம் தேவை . வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும் .வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம்.

உத்தியோகத்தில் கூடுதல் பணிகளைபோராடி முடிப்பீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here