இன்றைய ராசிபலன் – 29.01.2022

0

மேஷம்

மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். நண்பர்கள்,

உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

சாதிக்கும் நாள் .

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முன் கோபத்தை குறையுங்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள்.

தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான்.

உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.

உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.மகிழ்ச்சி பெருகும் நாள்.

கடகம்

கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும் . பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.

எதிர்பாராத சந்திப்பு நிகழும் . வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.

உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள்.

உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள் . நினைத்தது நிறைவேறும் நாள்.

கன்னி

கன்னி: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள்.

வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத நன்மை உண்டாகும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.

உறவினர்கள் வீடு தேடி வருவார்கள் . சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும்.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதுமுடிவுகள் எடுப்பீர்கள்.

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.உறவினர்கள் வீடு தேடி வருவார்கள் .வாகனத்தை சீர் செய்வீர்கள்.

வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் முக்கிய பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள்.

மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும்.

உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்

மகரம்

மகரம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.

சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சாதிக்கும் நாள்.

மீனம்

மீனம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.

மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here