இன்றைய ராசிபலன் – 27.02.2022

0

மேஷம்

மேஷம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.

சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.

உத்தியோகத்தில் மரியாதை கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களெல்லாம் நினைவுக்கு வரும்.

சகோதர வகையில் அலைச்சல் இருக்கும்‌ முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும்.

தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். தன்னம்பிக்கை பிறக்கும் நாள்.

கடகம்

கடகம்: சமயோசிதமாகவும் சாதுரியமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள்.

சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும்.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நிறைவான நாள்.

சிம்மம்

சிம்மம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்.

உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள்.

எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

கன்னி

கன்னி: கடந்த கால இனிய அனுபவங்களெல்லாம் நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள்.

பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.

உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

துலாம்

துலாம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள்.

வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள்.

நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதிய பாதை தெரியும் நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும்.

உறவினர் நண்பர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும்.

சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

மகரம்

மகரம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனை வரும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு.

பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். எண்ணங்கள் நிறைவேறும் நாள்.

மீனம்

மீனம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.

வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.

உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சியை அதிகாரி ஆதரிப்பார். மதிப்புக் கூடும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here