இன்றைய ராசிபலன் – 26.02.2022

0

மேஷம்

மேஷம்: மேஷம் : கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.

நீண்ட நாட்களாக தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும்.

வியாபாரத்தில் புதியமுயற்சிகள் பலிதமாகும் . உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப்படுவதை முதலில்நிறுத்துங்கள்.

குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். ‌

வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள் .இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும்.

தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள் ‌ வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள்.

உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும் .

உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரிகள் பாராட்டுவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும் . சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் உதவுவார்.

வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும் .கனவு நனவாகும் நாள்.

கன்னி

கன்னி: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.

தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். புது வேலைஅமையும் .

வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்‌ உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

துலாம்

துலாம்: உங்கள் பேச்சில் அனுபவஅறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.

அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கூடும். நினைத்ததை முடிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: இதுவரை இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும் .

குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். தோற்றப் பொலிவு கூடும் .

வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமுண்டு. தனவரவு உண்டாகும் நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை நீங்களே முடிப்பது நல்லது.

அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள்.

வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள்.

உத்தியோகத்தில் சிறுசிறு அவமானங்கள் வந்து நிற்கும் தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிப்பீர்கள்.

பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள்.

வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் விவாதம் வேண்டாம்.

உத்தியோகத்தில் பிரச்சினைகள் வரக்கூடும். கவனம் தேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். கடமை உணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

புது ஏஜென்சி எடுப்பீர்கள்.வியாபாரம் தழைக்கும்.உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here