இன்றைய ராசிபலன் – 24.08.2022

0

மேஷம்

மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.

தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

புது வேலை அமையும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும்.

உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்‌. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும்.

புது வாகனம் வாங்குவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.

உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியமான முடிவு எடுக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.

புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள்.

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள்.

வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். விருந்தினர் வருகை உண்டு.

வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.

உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். புகழ் கௌரவம் கூடும் நாள்.

துலாம்

துலாம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.

வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆடை ஆபரணம் சேரும்.

வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். ‌

பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.

பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.

வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள்‌. சிந்தனை திறன் பெருகும் நாள்.

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள்.

பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மையால் மன இறுக்கம் அதிகமாகும்.

உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது‌.

உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க பாருங்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.

மகரம்

மகரம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள்.

வாகனத்தை சீர் செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும்.

புது நட்பு மலரும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.

உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.

வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here