இன்றைய ராசிபலன் – 23.05.2022

0

மேஷம்

மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

நெருங்கியவர்களை சந்திப்பீர்கள். எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள்.

பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள்.

சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும்.

நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.

வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள்.

உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் எதையோ இழந்தது போல ஒருவித கவலைகள் வந்து போகும்.

மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.

உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: புதிய எண்ணங்களின் செயல்வடிவம் பெருகும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்.

மனைவி வழியில் ஆதரவு பெருகும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள்.

உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.

வேற்றுமதத்தவர் உதவுவார். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும்.

வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு.

உத்தியோகத்தில் உயரதிகாரி அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். கனவு நனவாகும் நாள்.

துலாம்

துலாம்: புதிய முயற்சி யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும்.

அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பயணங்களாலும் அலைச்சல்கள் உண்டாகும்.

தாய்வழி உறவினர்களால் மனத்தாங்கல் வந்து நீங்கும். புது வேலை அமையும்.

உத்தியோகத்தில் அதிரடி செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு

தனுசு: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள்.

உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மகரம்

மகரம்: உணர்ச்சிப் பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள்.

பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு.

உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள் ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள்.

உறவினர் நண்பர்களில் சிலர் உங்களை மதிக்காமல் போவார்கள்.

யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடை வார்கள்.

உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்டுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

மீனம்

மீனம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரக்கூடும்.

வியாபாரத்தில் வாடிக்கை யாளருடன் கனிவாகப் பழகுங்கள். போராடி வெல்லும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here