இன்றைய ராசிபலன் – 22.03.2022

0

மேஷம்

மேஷம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.

மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். அமோகமான நாள்.

மிதுனம்

மிதுனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும்.

ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள்.

வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள்.

வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.

உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

கன்னி

கன்னி: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

அழகும் இளமையும் கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும்.

உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

துலாம்

துலாம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்.

உத்தியோகத்தில் பணியாட்களால் பிரச்சனைகள் வரக்கூடும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது.

திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள்.

வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூலிக்க பாருங்கள்.

உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். போராடி வெல்லும் நாள்.

தனுசு

தனுசு: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். மாற்றம் ஏற்படும் நாள்.

மகரம்

மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள்.

நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.

வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதிக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள்.

வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் இருந்தால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.

வீண் பழிக்கு ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம்.

வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. கவனம் தேவைப்படும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here