இன்றைய ராசிபலன் – 2021.10.02

0

மேஷம்

மேஷம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். தைரியம் கூடும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். கடனாக கொடுத்த பணத்தை தற்போது வசூளிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் நிலவும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். பணம் நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.

துலாம்

துலாம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பயணங்களால் ஆதாயமடைவீர்கள். விஐபிகள் அறிமுகமானவர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகி சுமூகமான சூழ்நிலை உருவாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நன்மை நடக்கும் நாள்.

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கவனம் தேவைப்படும் நாள்.

மகரம்

மகரம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை கூடி வரும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். வெற்றி வாய்ப்புகள் நிறைந்த நாள்.

கும்பம்

கும்பம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு தகுந்த பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மீனம்

மீனம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here