இன்றைய ராசிபலன் – 2021.08.10

0

மேஷம்

மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.

கடகம்

கடகம்: சோர்வு நீங்கித் துடிப்புடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நன்மை நடக்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் உங்களின் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: கணவன்- மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். பழைய பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் அதிக வேலைச்சுமை இருக்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

துலாம்

துலாம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் புதுத் திட்டங்களை அதிகாரிகள் வரவேற்பார்கள். சிறப்பான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: புதிதாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். மதிப்புக் கூடும் நாள்.

தனுசு

தனுசு: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தெளிவான முடிவுகள் எடுக்கும் நாள்.

மகரம்

மகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சுமார்தான். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். விழிப்புடன் செயல்படவேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: கணவன்- மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவர் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். பழைய பிரச்சினைகளை பேசி தீர்ப்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.

மீனம்

மீனம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here