இன்றைய ராசிபலன் – 2021.07.15

0

மேஷம்

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காணாமல்போன முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தொட்டது துலங்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புதுவேலை கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நட்பு வட்டம் இருக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

கன்னி

கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்களால் பயணடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.

தனுசு

தனுசு: உங்கள் செயலில் வேகம் கூடும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மகரம்

மகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணப் புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடிவரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

கும்பம்

கும்பம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில சமயங்களில் விரக்தியாக பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் மற்றவர்கள் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

மீனம்

மீனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். திடீர் பயணங்கள் இருக்கும்.வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here