இன்றைய ராசிபலன் – 2021.06.25

0

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதிய நண்பர்கள் அறிமுக மாவார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். புதிய பாதை தெரியும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னை வந்து நீங்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர் கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கடகம்

கடகம்: அனுபவப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாய மடைவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள் அமோகமான நாள்.

சிம்மம்

சிம்மம்: ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களில் யார் நல்லவர்கள் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

கன்னி

கன்னி: எதிர்பார்த்த காரியங்களில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருக்கு அசதி சோர்வு வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வெற்றி வாய்ப்புகள் பெரும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் மதிப்பும் உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கும்பம்

கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வெளியூரி லிருந்து நல்ல செய்தி வரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக்கூடும் நாள்.

மீனம்

மீனம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர் நண்பர் களால் ஆதாயமுண்டு. நம்பிக்கைக் குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.உத்தியோகத்தில் உங்களின் கோரிக் கைகள் ஏற்கப்படும். உங்களது முயற்சிகள் பலிதமாகும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here