இன்றைய ராசிபலன் – 2021.06.23

0

மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. கவனம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புது நட்புமலரும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். நல்லன நடக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: சில சந்தர்ப்பங்களில் வாய்ப்பையும் பயன்படுத்தி கொள்கிறீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களால் முடிந்தவற்றை செய்து கொடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அமோகமான நாள்.

கடகம்

கடகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நட்பால் ஆதாயமும் உண்டாகும். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைகண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சூட்சமங்களை உணர்வீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி

கன்னி: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் மனம் விட்டுபேசி மகிழ்வீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன் கோபத்தை குறையுங்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். இரண்டாவது முயற்சியில் சிலகாரியங்கள் முடியும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். விழிப்புடன் இருக்க வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர்களுடன் வீண் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நம்பிக்கைக்குரிய ஒருவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சிறப்பான நாள்.

கும்பம்

கும்பம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையைமாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சந்திராஷ்டமம் நாட்கள் இல்லை.

மீனம்

மீனம்: உணர்ச்சிபூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். பிரபலங்கள் உதவு வார்கள். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here