இன்றைய ராசிபலன் – 2021.06.05

0

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நல்லது நடக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். நினைத்ததை முடிக்கும்நாள்.

கடகம்

கடகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில சமயங்கள் விரக்தியாக பேசுங்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் முக்கிய முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்

கன்னி

கன்னி: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். வெற்றி பெறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் புதிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

தனுசு

தனுசு: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகளை தாண்டிவெல்லும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த பந்தங்களில் சிலர் கேட்டஉதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சிலசூட்சுமங்களை சொல்லித்தருவார். தன்னம்பிக்கை பெருகும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நல்ல மாற்றம் ஏற்படும் நாள்.

மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விழிப்புடன் இருக்க வேண்டிய நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here