இன்றைய ராசிபலன் – 2021.03.26

0

மேஷம்

மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள் உறவினர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். கடைக்கண்ணால் நீங்கள் சொன்னாலும் அதை உங்களை சேர்ந்த சில நல்ல நண்பர்கள் செய்து முடிப்பார்கள்.

ரிஷபம்

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்

மிதுனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம்கிட்டும் நாள்

கடகம்

கடகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கை மாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளை இழுத்து போட்டுப் பார்க்க வேண்டி வரும். அடுத்தவர்களை குறைக் கூறிக்கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவீர்கள். உத்தியோகத்தில் வேலை சுமை அதிகரிக்கும். சகிப்பு தன்மை தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தை பற்றி கவலைகள் வந்து போகும்.புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். செலவுகளை குறைக்க பாருங்கள். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.நண்பர்களால் பிரசினைகள் வரக்கூடும்.வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் சோர்வு வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

துலாம்

துலாம்: ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரை இப்போது சந்திக்க நேரிடும். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். இனிமையான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மாரியதை கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.

தனுசு

தனுசு: கணவன் – மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். திடீர் பணம் வரவு உண்டு. புதிய முடிவுகள் எடுப்பீர்கள்.நீண்ட நாட்களாக செல்ல நினைத்து இருந்த இடத்துக்கு சென்று வாருவீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரி மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.

மகரம்

மகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலமான சவாலான வேலைகளை கையில் எடுத்துக் கொண்டு இருக்காதீர்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. புது முயற்சிகள் தாமதமாகும் நாள்.

கும்பம்

கும்பம்: பிள்ளைகள் உங்கள் அருமையை புரிந்து கொள்வார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்தி யோகத்தில் உயர் அதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நடுவார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த பிரச்சினையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். அமோகமான நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here