இன்றைய ராசிபலன் – 2021.03.20

0

மேஷம்

மேஷம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும் மகிழ்ச்சி பொங்கும். புதியவர் நண்பர்கள் ஆவார்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத் தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக் கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் இழப் புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்

கடகம்: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விரும்பத்தகாத மாற்றங்கள் வராமலிருக்க பிறரது உதவியை நாடுவீர்கள். வாகன வசதி பெரு கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தி யோகத் தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கன்னி

கன்னி: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலை யாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி குறை கூறுவார். சகிப்புத் தன்மைதேவைப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான மாற்றம் செய்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரி உங்களை மதித்து பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

தனுசு

தனுசு: உறவினர், நண்பர்கள் இடையில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத பணம் வரவு உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் நம்பி மூத்த அதிகாரி சிலமுக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள்.

மகரம்

மகரம்: சிக்கனமாக செலவு செய்து சேமிக்க தொடங்குவீர்கள். நட்பு வழி நல்ல செய்தியை கேட்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

கும்பம்

கும்பம்: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்ப்புகளை தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புதுவாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தினர் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுக்கும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here