இன்றைய ராசிபலன் – 2021.03.14

0

மேஷம்

மேஷம்: எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவாகபேசுங்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பெற்றோரின் ஆதரவு பெருகும். நம்பிக்கைக்குரிய வரை கலந்தாலோசித்து சிலமுடிவுகள் எடுப்பீர்கள். விசேஷங்
களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். சிறப்பான நாள்.

மிதுனம்

மிதுனம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உறவினர் நண்பர்களால் நன்மை உண்டு. உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.

கடகம்

கடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்தமோதல்கள் விலகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு.உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. நன்றிமறந்த சிலரை நினைத்து வருத்தம் அடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வளைந்து கொடுத்துப் போவதுநல்லது. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.அதிகார பதவியில் இருப்பவர்களின்நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்றுநிறைவேறும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.ஆடம்பர செலவு
களை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

தனுசு

தனுசு: பால்ய நண்பர்களில் ஒருவரை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும்.
வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்

மகரம்: தைரியமாக சில முக்கியமுடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்

கும்பம்

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாகஇருந்த அலைச்சல் டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும்.
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில்புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். மாற்றம் ஏற்படும் நாள்.

மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நண்பர்கள் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here