இன்றைய ராசிபலன் – 2021.03.13

0

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுகொடுப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.லாபம் பெருகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள்.மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: புதிய பாதையில் பயணிக்கத்தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும்.மனசாட்சி படி செயல்படும் நாள்.

கடகம்

கடகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்றுஆதங்கப்படுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப்பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வரக்கூடும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதரவகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும்.நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரிகள் ஆதரிப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.

கன்னி

கன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றிஉள்ளவர்களில் உண்மையானவர்கள் யார் என்பதை அறிந்துகொள்வீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புதுவேலை கிடைக்கும். வியாபாரத்
தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களைஉணர்வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு

தனுசு: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அனுபவ மிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும்.முயற்சியால் முன்னேறும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளி ஊரில் இருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். தாய் வழி உறவினரிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள்பார்வையிலேயே முடிப்பது நல்லது.யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். முன்
கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் உங்களை பற்றிய வதந்திகள் வந்து போகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: மறைமுக விமர்சனங்களும் எதிர்காலம் பற்றிய பயமும் வந்துநீங்கும். வாகனத்தில் சாலைகளைக்கடக்கும் போகும் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம்ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here