இன்றைய ராசிபலன் – 2021.03.11

0

மேஷம்

மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தினரின் ஆதரவுபெருகும். இழுபறியாக இருந்தவேலைகள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். புதிய சிந்தனைகள் தோன்றும். வெளிவட்டாரத்தில் புது
அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்அலுவலகத்தில் மரியாதை கூடும். உற்சாகமான நாள்.

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால்நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வார்கள். வியாபாரத்தில் ரகசியங்களைவெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அளவாகப் பழகுங்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கடகம்

கடகம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.புதிய சிந்தனைகள் தோன்றும்.புது வேலை அமையும் வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தார் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால்அனுகூலம் உண்டு. வழக்கில் நல்லதீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மதிப்புக்கூடும் நாள்.

கன்னி

கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

துலாம்

துலாம்: எதிர்ப்புகளையும் தாண்டிமுன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.பயணங்கள் திருப்திகரமாக அமையும்.வீட்டை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள் .

விருச்சிகம்

விருச்சிகம்: உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்
ததை முடிக்கும் நாள்.

தனுசு

தனுசு: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். நெருங்கியவர்களிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சகஊழியர்களிடம் கவனமாக பழகுங்கள். பொறுமைதேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தினருடன் வீண்விவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்கவேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உறவினர் நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். யதார்த்தமாக பேசி கவர்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைகளுக்கு ஒன்று தீரும். உங்களால் பலனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். இன்பம் பெறும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here