இன்றைய ராசிபலன் – 2021.03.07

0

மேஷம்

மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலருக்கு உதவிக்கரமான செயல்களை செய்வீர்கள். வீடு வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிர்ஷ்டம் ஏற்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும்.உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். மகிழ்ச்சி பெருகும் நாள்.

கடகம்

கடகம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்வுடன், செயல்படுவார்கள். நம்பிக்கைக்குரியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுய ரூபத்தை புரிந்து கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

கன்னி

கன்னி: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். திட்டமிடாத செலவுகளைப் போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். முயற்சியால் முன்னேறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கி கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். ஆடை ஆபரணம் சேரும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். நல்ல மாற்றங்கள் உண்டாகும் நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பலம் எது பலவீனம் எது என்பதை உணர்ந்து கொள்வது நல்லது. உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார் தான். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: வெளிவட்டாரத்தில் வீண் வாக்குவாதம் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் சிலர் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.

மீனம்

மீனம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனைவி வழியில் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையைமாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here