இன்றைய ராசிபலன் – 18.06.2022

0

மேஷம்

மேஷம்: பிரச்னையின் ஆணிவேரை கண்டறிவீர்கள்.

மற்றவர்கள் உங்கள் நலனில்அதிக அக்கறை காட்டுவார்கள்.

பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் மனம் விட்டுபேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.

வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். தள்ளிபோன விஷயங்கள் உடனே முடியும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள்

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள்.

உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும்.

சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்

கடகம்

கடகம்: நம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள்.

பிள்ளைகள் உங்கள் பேச்சிற்குமதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும்.

தாயாரின் உடல் நிலை சீராகும்.

உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும்.

உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்

கன்னி

கன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வரலாறு குறித்து யோசிப்பீர்கள்.

நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது வேலை அமையும்.

பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்

துலாம்

துலாம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.

தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடியான சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.

உங்களால் வளர்ச்சியடைந்த சிலரைச் சந்திக்க நேரிடும்.விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.

உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்

தனுசு

தனுசு: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அழகும் இளமையும் கூடும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.

வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். புது நட்பு மலரும்.

உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்

மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது.

பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்.

உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள்.

உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி இருக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து போகும்.

வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.

உடல் அசதி சோர்வு வந்து நீங்கும்.திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள்.

வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியருடன் விட்டுக்கொடுத்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்

மீனம்

மீனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here