இன்றைய ராசிபலன் – 18.04.2022

0

மேஷம்

மேஷம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.

மனதிற்கு பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.

உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் முடியும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள்.

நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களின் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.

உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள்.

உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். நல்லன நடக்கும் நாள்.

கடகம்

கடகம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

புதுவேலை கிடைக்கும். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும்.

உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.

வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பூர்வீக சொத்து பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.

உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மாறுபட்ட அணுகு முறையால் சாதிக்கும் நாள்.

துலாம்

துலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

உறவினர்கள் நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.

புதிதாக ஆடை வாங்குவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள்.

உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நன்மை நடக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம்.

வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள்.

உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம்.

தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

தனுசு

தனுசு: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிப்பீர்கள்.

பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள்.

வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். கவனம் தேவைப்படும் நாள்.

மகரம்

மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள்.

காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.

வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில் புதிய நிர்வாக திறமை வெளிப்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்.

கும்பம்

கும்பம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள்.

பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.

வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும்.

தேவைகள் பூர்த்தி ஆகும் நாள்.

மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் தன்னம்பிக்கை குறையும். உறவினர் நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும்.

சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள்.

உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள்.

வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here